இந்தியாவின் இரண்டு எல்லைகளாக. கன்னியாகுமரி, காஷ்மீர் என்ற எல்லைக்கோட்டின் தென்கோடி பகுதியான. கன்னியாகுமரியில் புதிய ஆண்டு.’2026′ யை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மற்றும். உலகப்பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவர், சமயம் கடந்து நாம் எல்லோரும் ஒற்றை மனித குலம் என உலகிற்கு போதித்த விவேகானந்தர் நினைவு மண்டபம் இடம் பெற்றுள்ள

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நள்ளிரவு 12 மணிக்கு. மொழி கடந்து, மதம் இல்லாது, மனித நேயம் மிளிர பன்மொழி மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சி என்ற ஒற்றை ஓங்கார குரலில் . புதிய ஆண்டை,வான வேடிக்கை மற்றும் முக்கடலின் அலைகளின் ஓங்கார ஓசையையும் பின்னுக்கு தள்ளி. மனித குலத்தின் மகிழ்ச்சி என்னும் உணர்வு பிரமாதமாக மகிழ்ச்சி ஓசையுடன் ஓங்கி ஒலித்தது.




