மதுரை மாவட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாமதுரையை தூய்மையான நகரமாக்கிட “எழில்கூடல்” எனும் சிறப்பு திட்டத்தின் முதல் நிகழ்வாக மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணியினை துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதற்கட்டமாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சுற்றியுள்ள ஆவணி வீதி, மாசி வீதி மற்றும் ஆவணி மூல வீதி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணி செய்யவும், மேலும் அன்று இரவு முழுவதும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் தூய்மை செய்யப்பட்டு பின் அதே இடங்களில் தொட்டியில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கவும், அதேபோல் இந்த இடங்களில் குப்பைகளை அங்காங்கே கொட்டாத வண்ணம் குப்பை தொட்டிகளும் வைத்து இந்த தூய்மை பணியினை மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு விழிப்புணர்வு தூய்மை பணி செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த மாபெரும் தூய்மை பணியினை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ள சன்னதி தெருவில் துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 42, 43, 47, 49, 50, 51, 52, 53, 54, 55, 76, 85 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட அம்மன் சன்னதி & சுவாமி சன்னதி, தெற்கு சித்திரை தெரு, மேற்கு சித்திரை தெரு, வடக்கு சித்திரை தெரு, கிழக்கு சித்திரை தெரு, சொக்கப்ப நாயக்கர் தெரு, தெற்கு வடம்போக்கி தெரு, வெள்ளியம்பல தெரு, தபேதர் மாதர் கான் தெரு, தொட்டி கிணற்று சந்து, தெற்கு ஆவணி மூல தெரு, வெண்கல கடை தெரு, புதிய சினிமா தெரு, நேதாஜி சாலை, மேற்கு கோபுரம் தெரு, வடக்கு கோபுரம் தெரு, மேல பட்டமர் தெரு, கீழ பட்டமர் தெரு, தியாகி தைம்மாள் தெரு, மேற்கு ஆவணி மூல தெரு (ம) பூக்கார தெரு, தானப்ப முதலியார் தெரு, கீழ அனுமந்தன் கோவில் தெரு, மேல அனுமந்தன் கோவில் தெரு, வடக்கு ஆவணி மூல தெரு (ம) MLC பார்க்கிங், பழைய சந்தை தெரு, வடக்கு ஆவணி மூல தெரு (ம) MLC பார்க்கிங், பழைய சந்தை தெரு, கிழக்கு ஆவணி மூல தெரு (ம) தளவாய் தெரு, டவுன் ஹால் ரோடு (ம) பெருமாள் தெப்பம், பெரியார் பேருந்து நிலையம், மேல வடம்போகி தெரு, கூடலழகர் பெருமாள் கோவில் பகுதி, TPK சாலை மதுரா கோட்ஸ் பாலம் வரை, கிழக்கு மாசி தெரு, தெற்கு மாசி வீதி, கிழக்கு மாரட் தெரு, தெற்கு வடம்போக்கி தெரு, மேற்கு மாசி தெரு, வடக்கு மாசி வீதி, விளக்குத்தூண் முதல் தெப்பக்குளம் வரை, தெப்பக்குளம் 4 பக்கம், கிழக்கு வெளி வீதி, தெற்கு வெளி வீதி, முனிச்சாலை, மேற்கு வெளி வீதி வடக்கு வெளி தெரு (ம) சிம்மக்கல், யானைக்கல், வடக்கு வெளி வீதி, அனுமார் கோவில் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, பணிமனை சாலை, மணி நகரம் (ம) ஞாயிறு சந்தை, தமிழ்ச் சங்க சாலை மதுரா கோட்ஸ் பாலம், வடக்கு வடம்பூகி (ம) கிருஷ்ணா ராயர் தெப்பக்குளம், மேல மாரட் தெரு, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, சம்பந்த மூர்த்தி தெரு, நல்ல கொட்டகை தெரு (ம) நாயக்கர் தெரு, வக்கீல் புது தெரு, சிம்மக்கல் சின்னக்கடை தெரு, தெற்குவாசல் சந்தை, தெற்குவாசல் குற்றப்பிரிவு, பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு உள்ளிட்ட 64 இடங்களில் 17 சுகாதார ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு இரண்டு முதல் மூன்று சுகாதார மேற்பார்வையாளர்கள், 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 500 முதல் 1000 மீட்டர் தூரத்திற்கு இணைந்து குடியிருப்புகள் மற்றும் தெருக்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
மேலும் தூய்மைப்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் 1000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் மூலம் அழகுபடுத்தும் பணியும், பொதுமக்கள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களை வீசாமல் இருப்பதற்காக அனைத்து மின்கம்பங்களிலும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வண்ண மூங்கில் கூடைகள் வைக்கப்படும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூய்மை படுத்தவும், சாலைகளில் ஓரம் உள்ள மணல்களை அகற்றவும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக பொறுப்பு நீதியின் கீழ் வாகனங்கள் பெற்று இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாபெரும் தூய்மை பணியினை தொடர்ந்து கண்காணிக்கவும் தொடர்ந்து மேற்கொள்ளவும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாபெரும் மக்கள் இயக்கமாக மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:-

தூங்கா நகரமாக இருக்கக்கூடிய மதுரையை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட அனைவரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து இரவு நேரங்களில் தூய்மை பணியினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரது முழு ஆதரவோடு இந்த பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்கள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்படுகின்றன. பொது மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையிலும் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது மற்றும் சாலைகளில் மாடுகளை சுற்றித் திரியவிடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் தூய்மை பணிகள் தொடர்ந்து இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் இப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
எழில் கூடல் திட்டத்தின் கீழ் நடைபெறும் மாபெரும் தூய்மை செய்யும் பணிக்கு பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், வணிகர் சங்கம் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி குப்பைகளை சாலையில் கொட்டாமல் உங்களது சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், , மதுரை (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் மூ.பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.