எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் சார்பாக Transforming India Conclave (TIC) டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்கிளேவ் எனும் நிகழ்ச்சி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது..
நான்காவது ஆண்டாக நடைபெறும் இதில்,இன்றைய மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன..

மூன்று நாட்கள் நடைபெறும் இதில்,இரண்டாவது நாளாக “ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் 2025” எனும் , மாணவர்களின் தொழில்முனைவு சிந்தனையை ஊக்குவித்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புதுமையான திட்டங்களை பாராட்டும் வகையில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.. .
இதில்,எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்கள் உட்பட, இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது புதுமை திட்டங்கள் குறித்து பேசினர்..
முன்னதாக நிகழ்வின் துவக்க விழாவில், எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்களின் கல்வி இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ், பேசினார்..
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தும் சவால்கள் மற்றும் பயன்கள் குறித்து பேசினர்…
இதில், எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் , நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர், டாக்டர் மணிமேகலை மோகன், தொழில் முனைவோர் ஷரண் ஹெக்டே,மருத்துவர் ராஜா சபாபதி, ஜிபு எலியாஸ், ஆகியோர் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு குறித்து பேசினர்..
தொடர்ந்து ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் விருதுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.