• Thu. May 2nd, 2024

பொது மக்கள் அத்தியாவசிய கோரிக்கையை சாதூரிய அணுகுமுறை பேச்சால் தீர்வு-கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரி சுக்குபாறை தேரிவிளை பகுதியில் உள்ள சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில், கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே ஆன இரட்டை தண்டவளப் பணிக்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பணியின் நிமித்தம் சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியவர்கள் அனைவரும் வேறு பாதையில் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தண்டவாள பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் திறக்கப்படாமே இருந்தது. இரயில்வே துறையினர் மக்கள் மற்றும் வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும் பகுதியில் உள்ள பணிகள் முழுமையடையவில்லை என ஒரு சாக்கு சொல்லி வந்த நிலையில், சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் வசிக்கும் மக்கள் ரெயில்வே கேட்டை சின்ன, சின்ன காரணங்களை சொல்லி திறக்க காலதாமதம் படுத்தும் ரெயில்வே துறைக்கு எதிராக நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக, அப்பகுதியில் கூடி போராட்டம் நடத்தினர்.

கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் போராட்டக்காரர்கள் சார்பாக, அந்த பகுதிக்கு வந்த ரெயில்வே துறை அதிகாரிகளிடம். இந்த பகுதியில் உள்ள மக்கள் தண்டவாள பணி காலத்தில் மிக சிறமமாக இருந்த போதும் சூழலை உணர்ந்து பணிக்கு ஒத்துழைத்தார்கள். இப்போது பணிகள் 90 சதவீதம் முடிந்த பின்னும், சிறு பணிகளை காரணம் காட்டி ரெயில்வே கேட் திறக்க காலதாமதம் படுத்துவது முறையா.?என கேள்வி எழுப்பியதுடன் எஞ்சி உள்ள பணிகளுக்கு தடை இல்லாது, பொது மக்களின் தேவையை நிறைவேற்றுவோம் என பி.டி. செல்வகுமார் உறுதி கொடுத்த வகையில், கடந்த 5-மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. கூடி நின்ற பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். பி.டி.செல்லகுமார் தலைமையில் இது வரை தடை செய்ய பட்ட பகுதி வழியாக எதிர் பகுதிக்கு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *