• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

gமுடிவுக்கு வந்தது கோலியின் கேப்டன் சகாப்தம்!..

ஏறக்குறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்தார்.
சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இச்சூழலில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்திய டி20 மற்றும், பெங்களூர் அணியின் கேப்டன்சியில் இருந்து விலகியது, ஒருநாள் போட்டிகளின் கேப்டசியில் இருந்து பிசிசிஐ-யால் தூக்கப்பட்டது என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது மீதமுள்ள டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே முன்வந்து விலகியுள்ளார் கோலி. டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செய்த சாதனைகள் இதோ..

மகேந்திரசிங் தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியபின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை முதல்முறையாக வழி நடத்தினார் விராட் கோலி. ஏற்குறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்தார். இதுவரை விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். இதில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்துள்ளது இந்திய அணி;11 போட்டிகளை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி 5,864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதம், 7 ஆட்டநாயகன் விருது, 3 தொடர் நாயகன் விருதை கேப்டன் கோலி வென்றுள்ளளார். இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள் (20) அடித்தவர் என்ற சாதனையும் கோலிக்கு சொந்தமானதே. டெஸ்ட் அணி கேப்டனாக வெற்றி சதவிகிதத்தை 58.82 ஆக வைத்துள்ளார் விராட் கோலி.

இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் (68 போட்டிகள்) மற்றும் அதிக டெஸ்ட் வெற்றிகளை தந்தவர் என பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி இருக்கிறார் கோலி. கிரேம் ஸ்மித் (53 வெற்றி), ரிக்கி பாண்டிங் (48 வெற்றி) மற்றும் ஸ்டீவ் வாக் (41 வெற்றி) ஆகியோருக்கு அடுத்து, டெஸ்ட் வரலாற்றில் நான்காவது வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி உள்ளார்.
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது , இந்தியா தரவரிசையில் இருந்த இடம் 7. அவர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இப்போது, இந்தியா தரவரிசையில் உள்ள இடம் ஒன்று. டெஸ்ட் கேப்டனாக கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்படவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து விராட் கோலி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ”ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒவ்வொன்றும் நிறுத்தப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக் காலத்தையும் நிறுத்துகிறேன்.
என்னுடைய கேப்டன்ஷி பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனால், ஒருபோதும் என்னுடைய முயற்சியிலும், நம்பிக்கையிலும் தொய்வு வந்தது இல்லை. இந்திய அணியை சரியான திசையில் கொண்டு செல்ல ஒவ்வொரு நாளும் கடினமான உழைப்புடன், இடைவிடாத முயற்சியுடன் 7 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். இந்தப் பணியை நான் முழு நேர்மையுடன் செய்தேன், எதையும் விட்டுவிடவில்லை.

ஒவ்வொரு விஷயத்தை நான் செய்யும்போதும் 120 சதவீத உழைப்பை வழங்குவேன் என நான் நம்புகிறேன். ஆனால், என்னால் செய்யமுடியாவிட்டால், அதைச் செய்ய இது சரியான நேரம் இல்லை என எனக்குத் தெரியும். நான் என் மனதில் முழுத் தெளிவுடன் இருக்கிறேன். என்னுடைய அணிக்கு நேர்மையற்றவனாக இல்லை.
இந்திய அணியை இத்தனை ஆண்டு காலம் தலைமை தாங்கி வழிநடத்த வாய்ப்பு வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. தொடக்க நாளிலில் இருந்து என்னுடைய நோக்கத்தோடு பயணித்த சக வீரர்களுக்கு நன்றி, எந்த சூழலிலும் யாரையும் கைவிட்டதில்லை. ரவி சாஸ்திரி, எம்எஸ் தோனியின் பங்களிப்பை நான் மறக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த எந்திரம் நகர்ந்து முன்நோக்கி செல்ல ரவி பாய் காரணமாக இருந்தார்.
என்னுடைய கேப்டன்ஷியில் நம்பிக்கை வைத்து, இந்திய அணியை முன்னோக்கி என்னால் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்து செயல்பட்ட தோனி சகோதரருக்கு மிகப்பெரிய நன்றி” என்று மிக உருக்கமாகத் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கோலி.