• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் பரவிவரும் எபோலா வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்

ByA.Tamilselvan

May 3, 2022

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தயுள்ளது.
உலகை ஆட்டிபடைத்துவரும் கொரனா வைரஸைவிட மிகககொடூரமானது எபோலா வைரஸ்.இந்த வைரஸ் தாக்கினால் ரத்தப்போக்கும்,காய்ச்சல்உள்ளிட்டபல சிரமங்களை ஏற்படுத்தும்.1976ம் ஆண்டு முதலே ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் இந்த வைரஸ் கடந்த சிலஆண்டுகளுக்குமுன் மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி மறைந்து போனது.தற்போது மீண்டும் பரவிவருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது உலகநாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை அந்நாட்டில் 13 முறை கண்டறியப்பட்டு உள்ளது. இதில் கடந்த 2018-2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரவிலின் போது அதிகபட்சமாக 2,300 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் காங்கோ நாட்டில் வரமேற்கு பகுதியில் தற்போது மீண்டும் எபோலோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என தேசிய உயிரி மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து காங்கோவின் அண்டை நாடான தான்சானியாவின் சுகாதார அதிகாரிகள் அதிக கண்காணிப்புடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கோ எல்லையை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு பணிக்கான நிபுணர்கள் அடங்கிய பல குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அந்நாட்டு சுகாதார துறை நிரந்தர செயலாளர் ஆபெல் மகுபி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,அண்டை நாடான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் எபோலா பரவலை பற்றி அறிந்து நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு இந்த விசயத்தில் பணியாற்றி வரும் சூழலில் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.