நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று(செப்டம்பர்_1)இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பேருந்தை ஓட்டினார். மேலும், பான் பராக் போட்டு துாங்கியவாறும் இருந்தார் என பயணிகள் தெரிவித்தனர்.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்தனர்.
“பொதுமக்களின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.