மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட குமரன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்த இயக்கி சென்ற ஓட்டுனர் தங்கம் என்பவர் சாப்பாடு சாப்பிட்டபடி பேருந்தை இயக்குவது போன்ற வீடியோவை தனது instagram பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஓட்டுநர்களுடைய கடினமான வேலை குறித்தும் உணவு சாப்பிட கூட நேரம் இன்றி பேருந்தை ஓட்டுவதாக கஷ்டத்தை எடுத்துரைக்கும் வகையிலும் தனது instagram பக்கத்தில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்திருந்த தங்கம்

தனது instagram பக்கத்தில் சாப்பிட்டபடி ஸ்டேரிங்கை பிடித்து பயணிகள் இருந்தபோதே தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கிய வீடியோவையும் பதிவு செய்திருந்த நிலையில் பேருந்தில் பயணிகள் இருக்கும் போது இது போன்ற அலட்சியமாக பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்கலாமா எனவும், சாப்பிடுவதற்காக நிறுத்தங்களில் நிறுத்தி அதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில் இது போன்று வீண் விளம்பரத்திற்காக சாப்பிட்டபடி வாகனத்தை ஓட்டலாமா என சமூகவலைதள வாசிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக இளையதளங்களில் ட்ரெண்டாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள குமரன் ஆம்னி பேருந்து நிறுவனம் ஓட்டுநர் தங்கம் குமரன் டிராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே பணியில் இருந்து சென்று விட்டதாகவும் இந்த வீடியோ ஒரு மாதத்திற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் தங்கம் தொடர்ந்து வாகனம் ஓட்டும்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்ததன் காரணமாக ஏற்கனவே நிறுவனத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து வேலையில் இருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.













; ?>)
; ?>)
; ?>)