• Tue. May 7th, 2024

இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. அதை மீட்டெடுப்பதற்கான அரசியல் பயணம் வரும் காலத்தில் தொடரும்-என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

ByP.Thangapandi

Apr 4, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில், பி.கே.மூக்கையாத்தேவரின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், என்டிஏ கூட்டணி தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் பாஜக, தென்னிந்திய பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகிகள் தலைமையில் பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்.,

கல்வித் தந்தை பி.கே.மூக்கையாத்தேவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வழியில் அவரது வாரிசு போல் சாதி மதம் கடந்து இந்த மக்களுக்காக பாடுபட்டவர்., அவரது புகழ் என்னென்றும் நிலைத்திருக்கும். அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.,

மக்கள் நீதி மையம் கட்சி பாஜக கூட்டணியில் இல்லை என்றாலும் எந்த தகுதியின் அடிப்படையில் சின்னம் வழங்கியுள்ளனரோ, அதே அடிப்படையில் எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளனர்.,

சீமான் அவர்களுக்கு கொடுக்க கூடாது, அவருக்கு கிடைக்க கூடாது என்ற எண்ணம் எனக்கு கிடையாது., அவர் தேர்தல் ஆணைத்தில் காலத்திற்கு விண்ணப்பித்து இருந்தால் கிடைத்திருக்கும், காலம் தாழ்த்தியதால் அவருக்கு கிடைக்கவில்லை அதை திசை திருப்புவதற்கு பாஜக கூட்டணியில் உள்ள அமமுகவிற்கு கொடுத்திருக்கிறார்கள் என பேசுகிறார் அது தவறு.

தொகுதி மக்களின் வளர்ச்சி திட்டங்களை கொடுப்பது தான் என் பணி, 1999 முதல் 2010 வரை இந்த தொகுதியில் பணியாற்றியுள்ளேன். மேலும் இந்த தொகுதிக்கு என்ன என்ன திட்டங்கள் வேண்டுமோ அதை பிரதமர் மோடி மூலம் நிறைவேற்றி தருவேன்.

இரட்டை இலை துரோகிகளின் கையில் உள்ளது., ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மா இவர்கள் மறைவிற்கு பின் எனக்கு கிடைத்தது தான் குக்கர் சின்னம், அதே குக்கர் சின்னம் தான் உதயசூரியனை டெப்பாசிட் இலக்க செய்தது., இரட்டை இலை சின்னத்தை அவர்கள் பல ஆயிரம் கோடி செலவு செய்திருந்தாலும் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இந்த சின்னத்தை அம்மாவின் தொகுதி மக்கள் எனக்கு கொடுத்த சின்னம் குக்கர் எனவும்.,

இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது., எம்.ஜீ.ஆர் – ன் சின்னம் பி.எஸ்.வீரப்பாவிடமோ, எம்.என். நம்பியாரிடமோ இருந்தால் எப்படியோ அப்படித்தான் மக்கள் பார்க்கின்றனர்., அது பலவீனமாகி கொண்டே வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அது தெரியவரும்.,

இராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தது., அவருக்கு வாய் தவறுதலாக வந்திருக்கும், ஏனென்றால் அந்த சின்னத்தில் அவர் இருந்திருந்ததால்., அது பெரிய விசயம் இல்லை.,

நானும் ஒபிஎஸ்-யும் இணைந்திருப்பதே அம்மாவின் இயக்கத்தை, புரட்சி தலைவர் கண்ட இயக்கத்தை அம்மாவின் உண்மையான தொண்டர்களிடம் ஒப்படைப்பதற்காக தான்., அதை மீட்டெடுப்பதற்கான அரசியல் பயணம் வரும் காலத்திலும் தொடரும் என பேட்டியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *