• Tue. May 7th, 2024

பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

ByN.Ravi

Apr 4, 2024

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.
வாக்கு சேகரிக்கும் போது திடீரென வடை கடையில் புகுந்து வடை வியாபாரம் செய்து பின்னர் வடை சுட்டு டீ குடித்து “தாமரைக்கு ” வாக்குகளை வாசன் சேகரித்தார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் ஆதரவாக திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் .
அவர் உரையாற்றிய போது ராதிகா சரத்குமார் பிரபலமான வேட்பாளர் என்பதை விட பிரபலமான குணச்சித்திர நடிகர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
இந்த பகுதியில், தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு விருதுநகர் தொகுதியின் முக்கிய பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க முடிவெடுத்து விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.
விருதுநகர் தொகுதி ஒரு வியாபார நகரம் எண்ணெய் வித்துக்கள், பருப்பு உள்ளிட்டவர்கள் உற்பத்தி செய்வதற்கான அடையாளங்களைக் கொண்டது.
இந்த தொகுதி. சிறுதானிய உற்பத்தியில் பிரதான இடமாக விருதுநகர் தொகுதி உள்ளது.என்பதை நாம் அறிவோம்.
இந்த தொகுதியில் உள்ள மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கு வேட்பாளர் மேற்கொள்வார் .
தொகுதியின் பல்வேறு இடங்களில் நடக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்றார். திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகை விவசாயம் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த பகுதியிலே மல்லிகை விவசாயிகளை பொறுத்த வரை நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என, நீண்ட நாளாக கோரிக்கை வைத்துள்ளார்கள். மத்திய அரசின் துணையோடு இது போன்ற, ஒரு நிலை இந்த தொகுதியில் ஏற்படுவதற்கு ராதிகா சரத்குமார் பணிபுரிவார். .
குறிப்பாக விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி இ எஸ் ஐ மருத்துவமனை உள்ளிட்டவைகளை அமல்படுத்துவதற்கு வேட்பாளர் முயற்சி மேற்கொள்வார்.
சாட்சியாபுரம் திருத்தங்கல் ரயில்வே மேம்பால திட்டங்கள் செயல்படுத்தப் படுவதற்கான ஏற்பாடுகள் உறுதியாக எடுக்கப்படும்.
கடல் நீரை குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையம் தேவை என்பது வேண்டுகோள் அந்த வேண்டுகோளை நிறைவேற்றும் பணியை வேட்பாளர் செய்வார்கள் .
குல்லூர் சந்தை நீர்த்தேக்கத்தை தூர்வாரி குடிநீர் அதிகமாக மேம்படுத்தக்கூடிய நிலைலையை ஏற்படுத்துவார்கள்.
அருப்புக்கோட்டை தொகுதியில் நெசவாளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுடைய நலம் காக்கும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டவருக்கான நல்ல சூழலை உருவாக்கி தருவார்.
பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நல்ல நிலையை ஏற்படுத்துவார்கள். அருப்புக்கோட்டை திருச்சுழி வழியாக மதுரை – தூத்துக்குடி ரயில்வே சாலையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இரட்டை ரயில் பாதை அமைக்கவும். சாத்தூர், கப்பலூர் சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெறும் சூழலில் நாட்டை வல்லரசாக உயர்த்துவார் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசோடு ஒத்துப் போகின்ற வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே முடியும் எனவே இத் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

மக்கள் விரோத திமுக அரசுக்கு 2026ல் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நிலைக்கு ஆதாரமாக விருதுநகர் தொகுதியின் வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

காவேரி மேலாண்மை ஆணையம் இருந்தாலும் தமிழக அரசு நமது உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் கடந்த கூட்டங்களை போல தமிழக அரசு மெத்தனப் போக்கை கடைபிடிக்க கூடாது.

விவசாயி சேற்றில் காலை வைத்தால்தான் நாம் சோற்றில் கையை வைக்க முடியும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். எனவே விவசாயிகளின் எண்ணங்களை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல, தமிழ்நாடு தடையல்ல அதேபோல் எங்களுக்கு நியாயமாக கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு நீங்கள் தடையாக இருக்கக் கூடாது என்பது எங்கள் விவசாய பெருமக்களின் வேண்டுகோளும், தமிழக மக்களும் வேண்டுகோள் என்பதை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்றார் .
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது என்ற செய்தி இன்று பார்த்தேன். தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியே நிவாரணங்களை கொடுக்காமல் மத்திய அரசு கொடுத்த நிதியை வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தாமல் இன்றைக்கு வாக்கு வாங்கிக்காக புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்ற நினைக்கிறது குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் தமிழக அரசு மழை வெள்ளத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.
புயல் மழை,வெள்ள காலத்திலே பணிகளை திட்டமிட்டு செய்யவில்லை. அதன் அடிப்படையிலேயே வெள்ளம், மழையை தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை அவர்களின் அலட்சியப் போக்கையும், மெத்தன போக்கையும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் அதை நன்கு அறிவார்கள் வாக்களிக்கும் போது அதை மனதில் வைத்து அவர்களை மன்னிக்க மாட்டார்கள் .
மத்திய அரசால், தமிழகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட முதல் தவணை பணத்திற்கு தமிழக அரசிடம் வெளிப்படையான தன்மையான செயல்பாடு இல்லை என்பது தான் அரசின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிற சந்தேகம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, வாக்கு வங்கி அரசியலுக்காக புயல் வெள்ளத்திலே நிவாரணம் வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு செல்வது என்பது அரசியல் காழ் புணர்ச்சி வாக்கு வங்கி அரசியல் தேர்தலுக்காக என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களும் சரி, தமிழக மக்களும் சரி தமிழக அரசை இந்த விஷயத்தில் நம்ப தயாராக இல்லை என பேசிய ஜி. கே. வாசன் ராதிகாசரத்குமாருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேப்பு சேகரிப்பில் ஈடுபட்டார் .
டீக்கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் திருமண மண்டப வாசலில் நின்றவர்களிடமும், ஜிகே வாசன் வாக்கு சேகரித்தார். பின்னர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார் .

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த டீக்கடை ஒன்று சென்று தொண்டர்களுக்கு வடையை எடுத்துக் கொடுத்து வியாபாரம் செய்தார் பின்னர் அங்கிருந்த எண்ணெய் சட்டியில் வடை சுட்டு அதை எடுத்து தொண்டர்களுக்கு கொடுத்தார். பின்னர் ஜி கே வாசன் தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசனிடம் கச்சத்தீவு குறித்து திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குறை சொல்லி வருகிறார்கள் என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஜி. கே வாசன் கட்சத்தீவு பிரச்சனையில் யாரும் யாரையும் மாறி மாறி குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் கிடையாது இது ஒரு வரலாற்று பிழை வரலாற்றிலே இந்த பிழை இடம்பெற்றிருக்கிறது அன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முடிவுக்கு திமுக உடந்தையாக செயல்பட்டது என்ற முடிவை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது இந்த வரலாற்றுப் பிழையை இனிமேல் திருத்த வேண்டும் என்றால் படிப்படியாக நம்முடைய பாரதப் பிரதமர் ஆளுமையின் அடிப்படையில் அடுத்த நாடுகளோடு இணைந்து செயல்பட்டு இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவார் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
மீனவர்கள் இனி ஒருபோதும் திமுக, காங்கிரசை நம்ப மாட்டார்கள். மீனவர்களை இனிமேல் ஏமாற்ற திமுக காங்கிரஸ் நினைக்க வேண்டாம் அவர்கள் ஏமாளிகள் அல்ல என்றார். தொடர்ந்து திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என பிரதமர் பேசியதற்கு வைகோ திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை மண்ணோடு மண்ணாக்குவோம் என பேசியது குறித்த கேள்விக்கு உலக அளவில் பிரதமரை பாராட்டக்கூடிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலில் அதனுடைய தாக்கம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *