• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சு

ByA.Tamilselvan

Jan 29, 2023

நிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் ENTகூட்டமைப்பின் சார்பில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் முதன்முறையாக நடைபெற்றது. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழை, தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் எங்கும் கிடைப்பதில்லை. நிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ், இதனை வலியுறுத்தும் மற்றும் செயல்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.