தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இன்று மாலை தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்டம் முதன்மை கல்வி வளாகத்தில் தமிழ்நாடு உனக்கு கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) 31-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி:-
புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமை கொண்டு வந்துள்ள அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும்.
முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்,ஆசிரியர் போட்டித் தேர்வு அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது பழைய ஓய்வு திட்டத்தை அமல் படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்.ஆனால் தற்பொழுது முதல்வர் ஆன பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும் 31 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.