• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனியில் மாற்றுத்திறனாளிக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

ByI.Sekar

Mar 16, 2024

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில நான்காவது இளையோர் ஒன்பதாவது மூத்தோர் மாற்றுத்திறனாளிக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 120க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். உடற் தகுதியின் அடிப்படையில் 14 வகையான பிரிவுகளில் 83 வகையான போட்டிகள் நடைபெறுகிறது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் வருகின்ற 29 மார்ச் முதல் 31 மார்ச் வரை மத்திய பிரதேசம் குவாலியர் நகரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தின் சார்பாக பங்கு பெற உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பாரா ஒலிம்பிக் கழகச் செயலாளர் வி சுமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் டாக்டர் எம்.விஜயகுமார் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.