தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு, முன்னேற்பாடாக குழுமை சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ஹரிஷ் குமார் தலைமையில் ,ஊர் பெரியவர்கள் முன்னிலையில் குழுமை சாட்டுதல் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் கிரகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் கிரகம் கோவிலை வலம் வந்து, மீண்டும் கோவிலை அடைந்து வழிபாடு நடந்தது.
அதனைத் தொடர்ந்து அம்மன் கிரகத்தை எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள கிணற்றில் குழுமை சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று, அம்மன் பூஞ்சோலை அடைந்தார். இதனை அடுத்து சித்திரை திருவிழா நாள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி 10.04.2024 அன்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியும், 15.04.2024 அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.