சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் இயங்கி வந்த மேகா கிரஷர் என்ற தனியார் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஆறு நபர்கள் இறந்தது சம்பந்தமாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அதன் குவாரி அனுமதியை ரத்து செய்தது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே காடாம்பட்டி பகுதியில் விதிகளை மீறி ஒரே சர்வே எண்ணில் மேகா கிரசர் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த குவாரி அருகே அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கோவில்கள் வீடுகள் உள்ளன. மேலும் கால்வாய் ஆக்கிரமித்து குவாரி சுற்றுச்சுவர் உள்ளது.
இந்த குவாரி இருப்பதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் கிரஷர் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கருங்காலக்குடி கிராமம் சார்பாக பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார்யிடம் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுத்தனர்.
