• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹீரோயினாக நடிப்பதற்கு தகுதி கிடையாது… ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறிய இயக்குனர்…

Byகாயத்ரி

Jun 11, 2022

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வருகிறார். இவர் சினிமாவில் குரூப் டான்ஸராக நுழைந்து, மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு அழகையும், நிறத்தையும் விட திறமையே போதுமானது என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் சினிமாவில் நடிக்க வந்தபோது அவரை ஒரு இயக்குனர் ஹீரோயினாக நடிப்பதற்கு உனக்கு தகுதி கிடையாது எனவும், துணை நடிகையாக நடிப்பதற்கு தான் உனக்கு தகுதி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இதனால் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை அசிங்கப்படுத்திய இயக்குனர் முன்பு தான் ஒரு ஹீரோயினாக வரவேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சுழல்தி வோர்டெக்ஸ் என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் படங்களில் நடிக்கும்போது தண்ணீர் கூட குடிக்க மாட்டாராம். ஏனெனில் அவர் பிரபலமான ஹீரோயினாக இல்லாத காரணத்தினால் அவருக்கு கேரவன் வழங்கப்படவில்லையாம். இவர் பண்ணையாரும் பத்மினியும் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போதுதான் கேரவன் வழங்கப்பட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.