• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டு ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். சித்திரை கனி காணும் நிகழ்ச்சியையொட்டி பல்வேறு விதமான காய்கறிகள், இளநீர்கள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமிபதியில் காலையில் நடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து வாகன பவனி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.