• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Byமதி

Nov 22, 2021

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அந்த பட்டியலையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

எந்தெந்த வார்டுகள் ஆண் வார்டு, பெண் வார்டு, பொது வார்டு உள்ளிட்ட விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்துவது, 2-வது கட்டமாக எந்தெந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது என்ற அட்டவணை தயாரிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணி ஓரிரு நாளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.