• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் தவறி விழுந்து தவித்த பசுமாட்டை, தீயணைப்பு துறையினர் 1 மணிநேரம் போராடி மீட்டனர்…

ByKalamegam Viswanathan

Aug 31, 2023

மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் இவரது பசுமாடு இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் தவறி அவரது 100 அடி விவசாய கிணற்றில் விழுந்தது.

உடனடியாக சந்திரன் சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் தீயணைப்பு படையினர், கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறுகட்டி பொதுமக்கள் உதவியுடன் 1 மணிநேரம் பேராடி மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.