சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது இங்கு சுமார் 20 குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கிராமத்தின் வயல்வெளி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். ஆனால்,அங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை மெயின் ரோட்டில் இருந்து மையத்திற்கு அழைத்துச் செல்லும்பொழுது, பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களால் ஆபத்து ஏற்படுவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு பய உணர்ச்சி ஏற்படுவதாகவும், அது மட்டுமல்லாது மழைக்காலங்களிலும் அருகில் உள்ள வயல்களில் விவசாயம் நடைபெறும் பொழுதும், இந்த அங்கன்வாடி மையத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதால் கட்டடத்தில் சில இடங்களில் தண்ணீர் கசிவு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகள் நல வட்டார அலுவலர் ஆய்வு செய்து. இங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் மெயின் ரோட்டில் உள்ள சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி செயல்பட உத்தரவிட்டதாக தெரிகிறது.
மேலும், இந்த சமுதாய கூடத்தில் முகூர்த்த காலங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு மையத்தை பயன்படுத்தும் பொழுது குழந்தைகள் வெளியேறக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களான ஹேம நிதா மற்றும் கார்த்திகா கூறும் பொழுது ஏற்கனவே புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஏனென்றால் கட்டிடத்தைச் சுற்றி வயல்வெளிகள் இருப்பதால் குழந்தைகளை பூச்சி கடித்து கை, கால் வீங்குகிறது. இது மட்டும் அல்லாது மெயின் ரோட்டில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்வதிலும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்த கார்த்திகா சமுதாயக் கூடத்தில் நடந்து வரக்கூடிய அங்கன்வாடியை அருகில் உள்ள பழைய பள்ளிக்கூட கட்டிடத்தை மராமத்து பார்த்து அங்கன்வாடியாக செயல்படுத்தினால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பெற்றோர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார் மற்றும் சமுதாயக் கூடத்தில் நடத்த கூடிய அங்கன்வாடி முகூர்த்த காலங்களில் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடிய அவல நிலையில் உள்ளன.
அதனால் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து அருகில் உள்ள பயன்பாடு இல்லாமல் உள்ள அரசு கட்டிடத்தை மராமத்து செய்துஅங்கு அங்கன்வாடி செயல்படுத்தலாம் என்று தெரிவித்தார்
பாக்கியம் என்ற பெண் தெரிவிக்கும் பொழுது கிராமத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் அங்கன்வாடி மையத்திற்கு மாதத்திற்கு இரண்டு முறை கூட்டத்திற்கு வர வேண்டும் அவர்கள் மெயின் ரோட்டில் இருந்து அங்கன்வாடி மையத்திற்கு வருவதற்கு சங்கடப்படுகிறார்கள் ஏனென்றால் கர்ப்பிணிப் பெண்கள் சில நேரங்களில் வயல்வெளியில் வருவதால் பயம் ஏற்படுவதாக தெரிவிப்பதாக கூறினார் அங்கன்வாடி மையம் ஊருக்குள் அமைந்தால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிரமங்கள் இல்லாமல் வந்து செல்ல வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்தார் எது எப்படியோ அரசு திட்டங்கள் செயல்படுத்தும் பொழுது அதிகாரிகள் கவனமாக எதற்காக இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ அந்த நிதி மக்களுக்குப் பயன்படக்கூடிய நிலையில் கட்டிடங்கள் அமைய வேண்டும் ஏனோ தானோ என்று நிதியை செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் கருத்துகளை கேட்காமல் கிராமத்திற்கு வெளியே வயல்வெளியில் அங்கன்வாடி மையம் அமைத்தது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அரசு பணம் வீணாகி கிடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்..