• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

ByTBR .

Apr 5, 2024

மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.

1.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1லட்சம் வழங்கும்-மகாலட்சுமி
திட்டம்.

2.மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

3.புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

4.விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை.

5.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

6.நீட், க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம்.

7.மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

8.பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும் புதிய ஜிஎஸ்டி 2.0 ஏற்றப்படும்.

9.மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும்.

10.மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுக்கபடும்.

11.அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொள்வதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்.

12.100 நாள் வேலை வாய்ப்பு திட்டக் கூலி 400 ஆக உயர்த்தப்படும்.

13.மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு பொதுப் பட்டியில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு
மாற்றப்படும்.

14.முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் அக்னி பத் திட்டம் ரத்து செய்யப்படும்.

15.எம் எல் ஏ அல்லது எம்பி கட்சி தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்படும்.

16.புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது.

17.நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய துறை ஆணையம் அமைக்கப்படும்.

18.நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும்.