திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாமானிய மக்களில் ஒருவர், தன்னுடைய பணியை சரியாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க பரிந்துறை செய்திட மனு ஒன்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்…

பெரியக்களக்காட்டூர் வோளான்மை கூட்டுறவு கடன் வங்கியில் தபால் மூலம் தனக்கு சான்றிட்டு வழங்க கேட்டதற்கு வங்கி தலைவர் மற்றும் வங்கி செயலாளர் அதன் விவரம் அலுவலகத்தில் இல்லை என்று கூறியதால் அதிருப்தி அடைந்துள்ள சுந்தரவேலு.அதனால் மக்கள் குறைத்தீர்க்கும் நாளன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது சம்மந்தப்பட்ட அதிகாரி யார் என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் இது போன்ற தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் அவர்களை செருப்பால் அடிக்க சட்ட அமைச்சகத்துக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் பரிந்துறை செய்ய மனு அளித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறான இந்த மனுவிற்கு திருவள்ளூர் மாவட்டம் ஒப்புகையும் அளித்துள்ளது… எத்தனையோ குறைத்தீர்கும் நாள் வைக்கப்பட்டாலும் இச்செயல் மற்ற அரசு அலுவலர்களுக்கும் ஒரு பயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.இது போன்ற சாமானிய மக்களக்கு பணி செய்யவே அரசு அதிகாரிகள் உள்ளனர்.அவரவர் வேலைகளை கண்டிப்போடு செய்தால் இத்தகைய நிலை ஏற்படாது என்பதே மக்களின் கூற்று.செருப்பால் அடிக்க பரிந்துறை கேட்கும் சாமானியனின் செயல் தற்போது பேசுப்பொருளாகிவிட்டது.