• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைகமிட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும்

Byகுமார்

Dec 17, 2022

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தில் முறைகேடு நடப்பதால் கிராம கமிட்டி .அனைத்து சமுதாயத்தினர். நடத்த அனுமதிக்கவேண்டும் அவனியாபுரம் நாட்டாமை சுந்தர் பேட்டி
தமிழக முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என அவனியாபுரம் கிராம மக்கள் அனைத்து சமுதாயத்தினர்கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவனியாபுரம் நாட்டாமை சுந்தர் கூறும்போது..மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் “தைத்திருநாள்” பொங்கல் அன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் துவக்கம் அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் “தைப்பொங்கல்” அன்று நடைபெறுவது வழக்கம் கடந்த அதிமுக ஆட்சியில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இதனை எதிர்த்து கிராம கமிட்டி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து கிராமத்து பிரதிநிதிகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டனர். ஆனாலும் தென் கால் பான விவசாயிகள் சங்கம் தன்னிச்சையாக செயல்பட்டதால் அவனியாபுரம் கிராம கமிட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்பொழுது ஜல்லிக்கட்டு போட்டி வரும் தைப்பொங்கல் அன்று துவங்கும் நிலையில் கிராம கமிட்டி சார்பில் நடத்த வேண்டும் என கிராம கமிட்டி நிர்வாகிகள் மந்தை அம்மன் கோவில் வழிபட்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.
தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கிராமம் கமிட்டி மக்களை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் ..
இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு அவனியாபுரம் கிராம கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூர் பாலமேடு போன்ற ஊரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி சார்பில் நடைபெறுகிறது அதேபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என ஜல்லிக்கட்டு விழா குழ தலைவர் முருகன் தலைமையில் 50க்கு மேற்ப்பட்டோர்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.