மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் மதுரை மாவட்டத்திலேயே அதிகப்படியான குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளியான அறிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார்.,


இன்று சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்து, வளமிகு வளர்ச்சி திட்டம் மூலம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளில் பெண் குழந்தைகள் வருகையை கண்காணிப்பது., கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்வது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.,

பெண் குழந்தைகள் குழந்தை திருமணம் மூலமும், சிறுவயது கர்ப்பம் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதுரை தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் மூலமும் விழிப்புணர்வை கிராம மக்களுக்கு வழங்கினர்.,

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியாக உள்ள இப்பகுதியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.




