பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், இன்று (15.07.2025) விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.ராஜேந்திரன் அவர்கள் உள்ளார்.
