விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார்.

வெம்பக்கோட்டை வேளாண்மை நலத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தார்.
,விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், வாசிப்பு திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து மாணவர்களுடன் உரையாற்றினார்.
விஜயரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலக்தினை பார்வையிட்டு, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய டவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
விஜயரெங்கபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலக்கோதைநாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட வரும் அறிவியல் ஆராய்ச்சி கூடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

தாயில்பட்டியில் ரூபாய். 41 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டார். வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் மனுக்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், உடன் இருந்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
