தேனியில் கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்

தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கியது
தேனி நாடார் சரஸ்வதி பள்ளியில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி இன்று (21/12/25) தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது
இந்த புத்தக கண்காட்சியில் 78 அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்கள் வைத்துள்ளனர் மேலும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை கவரக் கூடிய புத்தகங்கள் அதிக அளவில் இந்த புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன

மேலும் புத்தகத் திருவிழாவிற்கு பொதுமக்களை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.
புத்தகத் திருவிழாவின் முதல் நாளான இன்று பிரபல இசை கச்சேரி கலைஞரான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியினர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.




