இராஜபாளையம் சிஐடியூ கார் வேன் ஓட்டுனர் சங்கம் சார்பில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை நகர்மன்ற தலைவி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிஐடியூ கார் வேன் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 17வது ஆண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா இராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே அமைந்துள்ள வேன் ஸ்டாண்ட் பகுதியில் சங்கத்தின் அலுவலகத்தில் சிஐடியூ சங்க கார் வேன் ஓட்டுநர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் 10ம் வகுப்பு 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் இராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் கலந்து கொண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிஐடியூ மாவட்ட தலைவர் மகாலட்சுமி மாவட்ட செயலாளர் தேவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிஐடியூ சங்க துணை செயலாளர் தங்கவேல் வாழ்த்துரை வழங்கினார் சங்க பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.