• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்..!

Byவிஷா

Oct 18, 2023
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  இதில் பலதுறை சார்ந்த அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வர் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். அதில் காலையில் உணவு சமைக்கும் கூடம், சமையல் அறை, ஆய்வு செய்தார்.  அதன் பின் மாணவர்களுடன் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்ட அலுவலர்கள் ஒன்றாக அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.