சட்டமன்றத்தில் தளவாய்சுந்தரத்தின் கோரிக்கையை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே ஆயுர்வேதா கல்லூரி உள்ளது. அந்த ஆயுர்வேதா கல்லூரியில் 16 காலி பணியிடங்கள் உள்ளது. பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தளவாய் சுந்தரம் கூறினார்.

இந்திய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட 5 மருத்துவ பிரிவுகள் உள்ளது. இந்த 5 மருத்துவ பிரிவுகளில் 121 பேராசிரியர்கள் இடங்கள் காலியாக உள்ளது. அந்த காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. 10 நாட்களில் பணிஆணை முதலமைச்சர் மூலம் வழங்கப்படும் என்று மா. சுப்பிரமணியன் கூறினார்.
