• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்

ByA.Tamilselvan

Jun 21, 2022

சிறுவாணி அணையிலிருந்து நீரை திறந்து விட்டதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரி வித்துள்ளார். சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளள வுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜ யனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று கடிதம் எழுதி இருந்தார்.
இதில், ‘‘சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநக ராட்சிக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு உத்தரவிட வேண்டும். கேரள முதல்வர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உட னடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கி ணங்க, கேரள அரசு சிறுவாணி அணை யிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சி யின் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை திங்களன்று உடனடியாக திறந்து விட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோயம் புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்த்து வைத்ததற்கா கவும், இரு மாநிலங்களுக்கிடைய ஆன ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையி லிருந்து வேண்டிய நீரினை வழங்கிய மைக்காகவும் கேரளா முதல்வர் பின ராயி விஜயனை தொலைபேசி வாயி லாக தொடர்பு கொண்டு நன்றி தெரி வித்தார்.