மதுரை திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் தென்கால் கண்மாய் கரையோரத்தில் புதிதாக 1.20 கிலோமீட்டர் நீளத்தில் 41 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கப்பட்டது.

மதுரையில் இருந்து திருமங்கலம் செல்வதற்கும் மதுரை மாநகருக்குள் நுழைவதற்கு என்று ஒரே சாலையாக இருந்ததை இரு வழி சாலையாக மாற்றி பணிகள் முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லையென பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று முதல்வர் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் முடிவு பெற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பரங்குன்றத்தில் புதிதாக போடப்பட்ட இந்த இரண்டு வழி சாலையையும் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதை தொடர்ந்து புதிதாக போடப்பட்ட சாலை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.














; ?>)
; ?>)
; ?>)