• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மொழிப்போராட்டத் தியாகி சின்னசாமி அரங்கத்தினை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்..,

ByT. Balasubramaniyam

Feb 13, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கத்தினை திறந்து வைத்தார்.

கீழப்பழுவூர் ஊராட்சி, மொழிப் போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அரங்கினைப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் , மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் இரா .கென்னடி, மா .அன்பழகன், கோ அறிவழகன், ரெ.அசோக சக்கரவர்த்தி, தெய்வ இளைய ராஜன், அண்ணாதுரை, தன வேல், வி .எழில் மாறன், கே ஜி எஸ் முருகன்,பொன் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் இரா .பாலு, அரியலூர் நகர திமுக செயலாளர் இரா முருகேசன், நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட மதிமுக செயலாளர் க. இராமநாதன், விசிக மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவக்குமார் , வருவாய் கோட்டாட்சியர் செல்வி. பிரேமி,வருவாய் வட்டாட்சியர் முத்துலட்சுமி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு,உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீ. ஸ்ரீராம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாபு, மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி துணை வியார் கமலம், மகள் திராவிடச் செல்வி, மற்றும் அவரது குடும்பத் தினர்,கீழப்பழுவூர் நகர திமுக செயலாளர் இரவி,இதர அரசு அலுவலர்கள், மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.