இராஜபாளையம் தொகுதியில் தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் (ரூ.3.95 கோடி + கூடுதல் நிதி 1.60 கோடி ) ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் பணி நிறைவு பெற்ற திருக்குளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கோவிலில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன், சேத்தூர் ஜமீன்தார் V.T.S.D.துரை.ரத்தனகுமார், வாரியத் துணைத்தலைவர் ராசா அருண்மொழி, மதுரை இணை இயக்குனர் செல்லத்துரை குத்து விளக்கேற்றியும் திருக்குளத்தில் பூக்கள் தூவியும் சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தெப்பத்திருவிழாவை வரும் மார்ச் மாதம் சிறப்பாக நடத்துவது குறித்து, ஆலோசனை செய்து, அப்போது தெப்பத்தை சுற்றி இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அல்லது பொது நிதியிலிருந்து பேவர் பிளாக் தளம், கலையரங்கம், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறினார். மேலும் தெப்பத்தை சீரமைக்க முயற்சி மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் செயல் அலுவலர் கலாராணி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ்,சேத்தூர் சேர்மன் பாலசுப்ரமணியன், பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலிஅண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி,மாரிச்செல்வம் தேவதானம் கழக நிர்வாகிகள் மிசா நடராஜன் அரிராம்சேட் , சேகர், முருகேசன் பிரபாகரன், சீதாராமன், இந்திரஜித் சின்னமணி, கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
