விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை துறையின் கீழ் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025- 26 திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா நிகழ்ச்சி சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் முன்னிலையில் வெம்பக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

வேளாண்மை துறை சார்பில் பயறு வகைகள், விதை தொகுப்பு, மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பாக வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் குறித்தும் வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் குணசீலி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.
வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
