• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் மக்கள் மீது முதல்வருக்கு தனி பாசம்-சக்கரபாணி பேச்சு…

ByS.Ariyanayagam

Apr 13, 2026

தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி என்றால் முதல்வருக்கு தனி பாசம் கேட்டதெல்லாம் கொடுப்பார் என சக்கரபாணி பிரச்சாரம் செய்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியை திமுக வேட்பாளர் சக்கரபாணி, கீரனூர் ,மானூர், எரம நாயக்கன்பட்டி, பால் கடை, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள் மீது அதிக அக்கறை செலுத்தி தமிழக அரசு திட்டங்களை தீட்டுகிறது. பெண்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம் உட்பட பல திட்டங்களை முதல்வர் திட்டி உள்ளார். தற்போது ரூ. 8000 கூப்பன் தந்து பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க அற்புதமான ஒரு அறிவிப்பை வழங்கி உள்ளார். ஒட்டன்சத்திரத்துக்கு கல்லூரி, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம், குடிநீர் உட்பட பல நல்ல திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளார். தமிழக மக்களை நேசிக்கும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார்.

அதனால்தான் அருமையான திட்டங்கள் அவர் மனதில் உதிக்கிறது. ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள் மீது தனி பாசம் கொண்டவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின். அதனால் நான் எது கேட்டாலும் தவிர்க்காமல் ஒட்டன்சத்திரம் மக்களுக்கு செய்யக்கூடியவர். ஏழாவது முறையாக நான் வெற்றி பெற்றவுடன், தனி மாவட்டம் பழனி உருவாக்கப்படும்.

பழனி சூழ் கழனி என ஒட்டன்சத்திரம் விவசாயம் எங்கும் செழிக்கும். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் திட்டங்களை தரும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டணி கட்சியினர் அவருக்கு வழி நெடுக வரவேற்பு அளித்தனர்.