தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலம் வரை. காவல்துறைக்கென்று தனி அமைச்சர் இருந்தார்.
திமுக ஆட்சி 1967_ல் பதவி ஏற்றது முதல் முதல்வரின் கீழ் உள்ளதாக காவல்துறை மாற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்கிறது.
காவல்துறையில் சாதாரண காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை. அவர்களது சீர் உடையான ‘காக்கி’ எவரை வேண்டுமானாலும் தாக்கலாம்,வயது வரம்பு பார்க்காமல்
அசிங்கமான வார்த்தைகளில் திட்டும் உரிமை பெற்ற சர்வாதிகாரி என்று அந்த துறையில் உள்ள சில தலைக் கனம் பிடித்தவர்களால்,மொத்த காவல்துறையையும் ஒரே பார்வையில் பார்க்கப்படும் அவலம்.
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதும் முற்றிலும் உண்மை நிலைக்கு அப்பால் பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 14_ பேர் கொலைசெய்யப்பட்டது.
சாத்தான் குளம் சிறை கொட்டடி கொடுமையில் தந்தை, மகன் கொலை வரிசையில்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி அஜீத்தின் கொலை. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாக ஈடுபட்ட அதிகாரிகள் உட்பட தனிப்படை காவலர்களுக்கு காலம் நீட்டாது. உடனடியாக கொலை குற்ற தண்டனையை நீதி மன்றம் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தை. குமரி மாவட்டத்தில் பல்வேறு நிலைப் பட்ட மக்கள் (மாணவசமூகம்) உட்பட மக்கள் அவர்களின் கருத்தாக தெரிவித்த குமரி மாவட்ட மக்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். காவல்துறையால் அடித்து கொலை செய்யப்பட்ட காவலாளி அஜீத்தின் தாய்,சகோதரர் இடம் கை பேசியில் பேசி ஆறுதல் சொன்னது. நான் இருக்கிறேன் உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்னதை உயர்ந்த மனித நேய பண்பாடு என வாழ்த்துகிறார்கள்.