மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த திமுக தலைமை தென்மண்டல பேரூர் செயலாளர்கள் பட்டியலில் அவரை முதலிடம் அறிவித்து அவருக்கு விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறது.

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. தெற்கு மண்டலத்தில் சிறந்த திமுக பேரூர் செயலாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் வார்டுகவுன்சிலர் சத்ய பிரகாஷ் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து ஆசி பெற்றார் அவருக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் சோழவந்தான் துணைச் செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.