• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது

ByA.Tamilselvan

May 26, 2023

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை ஒட்டி மத்திய அரசு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது. அத்துடன் இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறும். நாணயத்தின் மற்றொரு புறத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், பாராளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது. இந்த நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் four-part அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.