• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை மதுரையில் எம்.எஸ்.ஷா பேட்டி…

Byகுமார்

Jul 22, 2022

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை, மின் கட்டணத்தை மாற்றியமைக்க தான் கூறியது என மதுரையில் பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா பேட்டி…

தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “2024 ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், தமிழக முதல்வர் அறிவித்த வாக்குறுதிகளை, திட்டங்களை செயல்படுத்தவில்லை, மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளனர், மத்திய அரசு பிற மாநிலங்களை விட தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, மத்திய அரசு 8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,

மத்திய அரசின் திட்டங்களை லஞ்சம் இல்லாமல் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது, மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை, மின் கட்டணத்தை மாற்றியமைக்க தான் கூறியது, ஒவ்வொரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை கொண்டே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது, இந்தியாவில் எந்தவொரு பிரதமரும் செய்ய முடியாத சாதனைகளை பிரதமர் மோடி செய்து வருகிறார், அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்தும் மாநில அரசு வரியை குறைக்கவில்லை” என கூறினார்.