கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வருகை தந்தனர். காலை 10:30 மணி முதல் பொதுமக்கள், அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்காணிப்பு குழுவினரை நேரில் சந்தித்து மனுக்களை வழங்கினர்.

பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், தவெக மாவட்ட செயலாளரின் மனைவி உட்பட 30 பேர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மனுக்கள் பெரும் நேரம் முடிந்ததால் நேற்று மனு அளிக்க வந்த சுமார் 7 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், இன்று அவர்களை வரச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் சிபிஐ அலுவலகம் வந்த கண்காணிப்பு குழுவினர் சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நேரடி ஆய்வு செய்தனர். மேலும் தவெக கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்த லைட் ஹவுஸ் கார்னர் பகுதியையும் ஆய்வு செய்தனர்.








