• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் : உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!

Byதரணி

Jun 27, 2024

அமெரிக்காவில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அங்குள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி உள்ளது.

நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெட்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் வாஷிங்டனில் பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கன். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை வடிவகைப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடும் வெப்பம் காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.