மக்கள் சேவைக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் இதில் பணிபுரியும் நடத்துனர்கள் தாங்கள் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து தங்களை அரசு பேருந்தின் உரிமையாளர்கள் போல் நடந்து கொள்கின்றனர்.

மேலும் மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறுகிறோம் என்பதை மறந்து தன்னிலை அறியாமல் இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வது, பயணிகளிடம் மரியாதை இன்றி நடந்து கொள்வது, ஒருமையில் பேசுவது போன்ற நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள. இது குறித்து மாரியப்பன் கூறியதாவது நேற்று இரவு திருப்பரங்குன்றத்தில் உறவினர் ஒருவரை சந்தித்து விட்டு திருமங்கலம் டோல்கேட்டில் இருந்து சிவகாசி செல்லும் அரசு அரசு பேருந்தில் ஏறி (இரவு 10:10) விருதுநகர் செல்வதற்கு டிக்கெட் வாங்கி கொண்டேன்.
பேருந்து விருதுநகர் PRC செட் அருகே வரும்பொழுது நடத்துநர் விருதுநகர் செல்பவர்கள் இறங்கவும், பேருந்து பைபாஸ் சாலையில் சென்று விடும்என்று கூறினார். அதற்கு மாரியப்பன் ” இந்த இரவு வேளையில் ( 10:50) ஊருக்கு வெளியில் இறக்கி விட்டால் எப்படி செல்வது என்று கேட்டதற்கு நடத்தினர் ஒருமையில் சாடியுள்ளார். இதை கண்ட மற்ற பயணிகள் நடத்துநரிடம் வாக்கு வாதம் செய்த பின்னர் ஊருக்குள் நுழைந்து பயணிகளை இறக்கி விட்டு சென்றார்.பயணிகள் தேவைக்கு ஏற்ப நடத்துனர்கள் செயல்பட வேண்டும் தங்கள் விருப்பம் போல் செயல்பட கூடாது என்று கூறினார். இதே போல், விருதுநகர் வத்தல் வியாபாரி ஒருவர் கூறுகையில் எனக்கு திருநெல்வேலியில் உறவினர்கள் அதிகம், திருமணம், சடங்கு போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்புகையில் அரசு பேருந்து நடத்துனர்கள் பேருந்தின் வாசல்படியில் நின்று கொண்டு மதுரை மட்டும் செல்லும், வழியில் நிற்காது என்று வழியை மறித்து கொண்டு நிற்பார்கள்,

இப்போது நான் ரயில் மார்க்கமாக சென்று விட்டு பின்பு திரும்பி வருகின்றேன், இப்படி நடத்துனர்கள் அட்டூழியம் செய்தால் போக்கு வரத்து கழகம் ஏன் நஷ்டத்தில் இயங்காது என்று வருத்தத்துடன் கூறினார். இறுதியாக சிவராமன் அவர்கள் கூறுகையில் ” கொஞ்ச நாள் பொறு தலைவா அண்ணன் எடப்பாடியார் ஆட்சி அமைந்தவுடன் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்று கூறியுள்ளார், அதன்பின் இந்த அரசு பேருந்து நடத்துனர்கள் யாருக்கு டிக்கெட் கொடுப்பார்கள், அனைவருக்கும் இலவசம் என்று ஆன பிறகு இவர்கள் கனவில் தான் செல்லாது, நிற்காது, போகாது என்று கூற வேண்டும் என்று சிரித்தபடி கூறினார்.











