• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற முதலாளி…

ByJeisriRam

May 1, 2024
தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, உழைப்பாளிகள் தினமான இன்று மதுரையிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நிர்வாக இயக்குநர்.

மதுரையை மையமாகக்கொண்டு இயங்கிவரும் சத்யம் பயோ இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர் வி.செந்தில்குமார், இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணியினைப் போற்றும்விதமாக அவர்களுக்கு சர்ப்பிரைஸ் அளிக்க முடிவு செய்தார். தன்னுடன், பணியாளர்கள் 15 பேரினை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச்சென்று, பொழுது போக்குமிடங்களை சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் விமானத்திலேயே திரும்பி அழைத்துவந்துள்ளார்.

இது சம்பந்தமாக சத்யம் பயோ நிர்வாக இயக்குநர் வி.செந்தில்குமார், எங்கள் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உழைப்பினை பல வழிகளில் நாங்கள் ஊக்கப்படுத்திவருகிறோம். அதில் ஒன்றாக, இதுபோன்றதொரு நிகழ்வுகளை வருடந்தோறும் செய்துவருகிறோம். இதனால் அவர்களது மனமும், உடலும் புத்துணர்ச்சி அடைவதோடு, உழைப்பின் பலனை உணர்வதற்கு வாய்ப்பினை உருவாக்கித்தருகிறோம் என்றார்.