• Mon. Nov 11th, 2024

மரக்கன்றுகள் வழங்கிய பேரூராட்சி கவுன்சிலர்

ByKalamegam Viswanathan

Oct 16, 2024

சோழவந்தானில் விவசாயத்தை பாதுகாக்க மரக்கன்றுகளை பேரூராட்சி கவுன்சிலர் வழங்கினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் டீக்கடை வைத்திருப்பவர் கணேசன். இவர் பேரூராட்சியின் ஏழாவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தங்கள் வீடு வயல் தோட்டங்களில் நட்டு வளர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், அவர் கூறுகையில் சோழவந்தான் பகுதியில் விவசாய நிலங்கள் குறைந்து வருவதால் மரங்கள் அழிந்து மண்வளம் பாதிக்கப்படுகிறது. ஆகையால் விவசாயத்தை பாதுகாக்கும் பொருட்டு வருடம் தோறும் 100க்கும் மேற்பட்ட மா, பலா, கொய்யா, வேப்பமரம், மஞ்சனத்தி, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் இருப்பிடங்களிலும் வயல்களிலும், தோட்டங்களிலும் நட்டு வளர்க்குமாறு கூறி வருகிறேன். இதன் மூலம் மழை பொழிந்து விவசாயம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் அறிவியல் மன்ற தலைவர் சரவணன் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் துணைச் செயலாளர் முள்ளை தவம் பேரூர் அதிமுக பாசறை செயலாளர் அழகர் மாவட்ட பாசறை துணைச் செயலாளர் விக்கி மதன் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *