• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாலை குலமானது இறந்தவரின் உடலை
சிரமத்துடன் எடுத்துச் செல்லும் மக்கள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு சுற்று வட்டார பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட எமரால்ட் நேரு நகர் நேரு கண்டி எம்ஜிஆர் நகர் சுரேந்தர் நகர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எமரால்டு சுற்று வட்டார பகுதிகளில்இறந்தவர்களின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழி மிகவும் மோசமாகவும் மழைக்காலங்களில் சேரும் சகதிகளும் நிறைந்து குலம் போல் காட்சி அளிக்கின்றன சமீபத்தில் இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழி மிகவும் மோசமாகவும் நடப்பதற்கு வழி இல்லாமல் சேற்றில் இறங்கியவாறு உடலை எடுத்துச் சென்றனர். பழுதாகி கிடக்கும் சாலையை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் எனவும் எமரால்டு சுற்று வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.