• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இளையராஜாவின் மகள் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இளையராஜாவிற்கு சொந்தமான தேனி மாவட்டம் பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலி

ByKalamegam Viswanathan

Jan 27, 2024

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது உறவினர் கிருஷ்ணன் மற்றும் காயத்ரி சென்னையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 8:00 மணி அளவில் வந்திருக்கின்றனர். பின்னர் கார் மூலம் தேனி அருகே உள்ள பண்ணைப்புரம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பவதாரணையின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவின் மனைவி மறைந்த ஜீவாவின் உடல் பண்ணைப்புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மறந்த பாடகி பவதாரணி உடல் பண்ணைப்புரத்தில் இறுதி அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டு இளையராஜா மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணன் காயத்ரி ஆகியோர் மீண்டும் மதுரை வந்து மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4:30 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கின்றனர்.