• Fri. May 3rd, 2024

தமிழில் பேசிய குற்றத்திற்காக மாணவனின் காதை கிழித்த ஆசிரியை..!

Byவிஷா

Jan 27, 2024

சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவன் ஒருவன் தமிழில் பேசிய குற்றத்திற்காக, அந்தப் பள்ளி ஆசிரியை மாணவனின் காதைப் பிடித்து திருகியதில் காது சவ்வு கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குப் போயிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.
என்னய்யா.. இது அநியாயமால்ல இருக்கு. தமிழ்நாட்டுல பிறந்து தமிழ்ல பேசுறது ஒரு குத்தமாய்யா என மக்கள் புலம்பும் அளவிற்கு இச்சம்பவம் கொண்டு சென்றிருக்கிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி வளாகத்திற்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனை மீறி தமிழில் பேசுபவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்ப அபராதம், அடி, சராமாரியான திட்டு, பெற்றோரிடம் புகார் என விதவிதமான தண்டணைகளும் உண்டு. தமிழ்நாட்டில தமிழ்ல்ல.. பேசினா தண்டனையா என்றால் ஆமாம் அது தான் உண்மை. அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வகுப்பறையில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தமிழில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை நாயகி மாணவனை அருகில அழைத்து காதை பிடித்து திருகியுள்ளார். மாணவன் வலியால் அலறித் துடித்தான். வகுப்பில் இருந்த மற்ற சக மாணவர்கள் பீதியுடன் இதனை பார்த்திருந்தனர். ஆசிரியர் நாயகி மாணவனின் காதை பிடித்து திருகியதும் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுக்கும் முன்பே பெற்றோர் ஆத்திரத்தில் ஆசிரியரை தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *