• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘இரத்த நிலவு’ நாளை இரவுவானில் ஒரு அதிசயம்..,

இயற்கை ஒவ்வொரு கிரகணத்தின் போதும் வானில் நடக்கும் நாளைய அதிசயம். இரவு 9.57 முதல் அதிகாலை 1.26. கடிகாரம் சுற்றில் நடக்கும் சந்திர கிரகணம் வானில் இரத்த நிலைவை காண்பது. இதனை பார்க்க எவ்விதமான சிறப்பு கண்ணாடி வேண்டியதில்லை.

அவரவர் வீட்டு மாடியில் அல்லது திறந்த வெளியில் நின்று இரவு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வெறும் கண்ணாலே நேரடியாக ‘இரத்த நிலவை, காணலாம்.

இரத்த நிலவு குறித்து குமரி மாவட்ட, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் குமரி மாவட்ட தலைவர் பேராசிரியர் நாகராஜன் தெரிவித்தவை.

இரத்த நிலவு சந்திர கிரணத்தை நாளை(செப்டம்பர் 7,8) தேதிகளில் முதல் நாள் இரவு 9.57 முதல் அடுத்த நாள் நேரம் 1.26 வரை பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக. நாகர்கோவிலில் உள்ள ‘கார்மல்’பள்ளி வளாகத்தில். தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மூலம் பல்வேறு உபகரணங்கள் உதவியோடு நேரடியாக பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் நேரத்தில் வானில் நடக்கும் அதிசயத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் பொது நோக்கம் என குமரி மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.