பாஜகவின் தாரக மந்திரம் கழகங்கள் இல்லாத தமிழகம். நம்மா ஊர் பொன்னார் முதல் பிரதமர் மோடி வரை பலமுறை தமிழக மேடைகளில் உச்சரித்த மந்திர சொல். ஆனால் பாஜகவிற்கு கழகங்களை விட்டால் தமிழகத்தில் ஊன்று கோல் கூட கிடைக்கவில்லை என்பதே கடந்த கால உண்மை.

சட்டமன்ற தேர்தலில் பாஜக தயவில் எப்படியோ நான்கு பேர் சட்டமன்றத்தில் இடம் பிடித்து விட்டனர்.அடுத்து வந்த மக்களவை தேர்தலில் அன்றைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீர வசனங்கள் எல்லாம் புட்டு கிட்டு போனதுதான் மிச்சம். திமுக தலைமையிலான கூட்டணி 39+1 40 தொகுதிகளிலும்
திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது.
மோடி, அமித்ஷா இருவரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உறக்க சொன்ன கணக்கு பாஜக 400_இடங்களில் வெல்லும் என்ற அதிகாரப் பேச்சின் எதிரொலி. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தாலும் பெறும் பான்மை இல்லாது, இரண்டு மாநில கட்சிகள் கொடுக்கும் முட்டுக்கால், மூன்று கால் நாற்காலியில் இருந்து அதிகாரம் செலுத்துகிறது.

சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாத நிலையில். தமிழகத்தில் எங்கள் தோல்விக்கு காரணம். எங்களுக்கு தேவை இல்லாத சுமை பாஜக என அறிவித்த எடப்பாடி. அடுத்து சொன்னது தான் உலகமகா சிதம்பரம் ரகசியம். அதிமுக தலைமையில் மெக கூட்டணி என அறிவித்து விட்டு,பல விடியல்களில் ஏதாவது ஒரு கட்சி வந்து விடுமா? என காத்துக் கிடந்தது தான் மிச்சம். அதிமுகவின் தயவால் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆன ஜி.கே.வாசனும்,அதிமுகாவிற்கு டாட்டா காட்டிப் போனது தான் மிச்சம். தூக்கம் கலகத்தில் சொல்வது போல் மெக கூட்டணி என சொல்லிக்கொண்டிருந்தார். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எந்த கட்சியும் அதிமுகவை திரும்பி பார்க்கவில்லை.
அண்ணாமலை வேறு, தமிழகத்தில் திமுகவிற்கு எதிர் கட்சி நாங்கள் தான் என தினம் தினம் மேடை தோறும் சொல்லிக்கிட்டிருந்த நிலையில்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள். மெக கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வந்துள்ளது என விடாது கேள்வி எழுப்ப. சலித்து போன எடபடியின் பதில். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. தேர்தலுக்கு 6_மாசத்திற்கு முன் முடிவெடுப்போம். பாஜக இல்லாத எங்கள் கூட்டணிக்கு பல கட்சிகள் வருவார்கள் என சொல்லிக்கொண்டே இருக்க. வந்தது என்னவோ அமித்ஷா மட்டுமே……

டெல்லி கட்சி அலுவலகத்தை பார்க்க போகிறேன் என்ற போர்வையில். மூன்று வாகனங்களில் மாறி,மாறி பயணம் பட்டு எடப்பாடி பழனிச்சாமி போய் நின்றது அமித்ஷா சன்னதியில். காட்சிகள் மாறியது அண்ணாமலை தமிழக தலைவர் பதவியில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டு.
புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்பதற்கு முன்பே,சென்னை நட்சத்திரம் ஹோட்டலில். உள்துறை அமைச்சர் அருகில் எடப்பாடி பழனிச்சாமியை அருகில் அமர்த்தி. அதிமுக_பாஜக குழப்பத்திற்கு காரணமான அண்ணாமலையும் அமர்ந்திருக்க. செய்தியாளர்கள் சந்திப்பு நேரம் நான்கு முறை மாற்றி,மாற்றி கடைசியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அதிமுக இணைந்து தேர்தலை சந்திப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்லிவிட்டு போய் ஐந்து நாட்கள் கடந்த பின் இப்போது எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி ஒன்றும் கிடையாது என்ற தகவல். பாஜக முகாமில் எப்படி எதிரொலிக்கும் போகிறதோ.?
புதிய தலைவர் பதவி ஏற்ற சில நாட்களில் மத்தளத்தின் இரண்டு பக்கமும் அடி என்பதை புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி எதிர்கொள்வார்.?